News August 10, 2024
கேரள அரசுக்கு உறுதி அளித்த பிரதமர்

கேரள அரசுக்கு மத்திய அரசு துணை நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், சம்பவம் நடந்த உடனே கேரள CM உடன் பேசியதாகவும், NDRF, SDRF, ராணுவம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் உடனே செய்ததாகவும் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறிய அவர், பணத்தால் எந்த பணிகளும் தடைப்படாது என உறுதி அளித்தார்.
Similar News
News November 27, 2025
அரசியல் முன்னோடிகளுக்கு செங்கோட்டையன் மரியாதை

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், அண்ணா, MGR மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, தவெகவின் முன்னணி தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர் விஜய்யுடன் இணைந்துள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
News November 27, 2025
இரவு 7 மணிக்குள் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்?

ஒரு மாதத்திற்கு நீங்கள் இரவுநேர உணவை 7 மணிக்குள் சாப்பிட்டு பாருங்கள். உங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இரவு தாமதமாக சாப்பிடுவது, செரிமானம் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து சீக்கிரமாக சாப்பிட்டு வந்தால், உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 27, 2025
ரஜினியை இயக்கும் வாய்ப்பை இழந்த தனுஷ்

ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை தனுஷ் தவறவிட்டதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் கூறிய கதையில் நடிக்க ரஜினி விரும்பியுள்ளார். தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்தியதால் அப்படத்தின் பணிகள் கைவிடப்பட்டன. சமீபத்தில் <<18291964>>சுந்தர்.சி<<>> விலகலால் ரஜினி தரப்பு மீண்டும் தனுஷை அணுகியுள்ளது. எனினும் உடனடியாக ஷூட்டிங்கை தொடங்க முடிவெடுத்ததால் தனுஷிற்கு பதிலாக ராம்குமாருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.


