News April 25, 2025
தக்காளி, சுரைக்காய், சவ்சவ் விலை ரூ.10ஆக சரிவு

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.10ஆக குறைந்துள்ளது. இதேபோல், சுரைக்காய், சவ்சவ் விலையும் கிலோ ரூ.10ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. முள்ளங்கி, வெள்ளரிக்காய் ரூ.13ஆகவும், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ருட், காராமணி, பாகற்காய், முருங்கைக்காய், நூக்கல் ஆகியவை கிலோ ரூ.20ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.18ஆகவும், சின்ன வெங்காயம் ரூ.30ஆகவும் சரிந்துள்ளது.
Similar News
News April 25, 2025
BREAKING: லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக்கொலை

காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் அவ்வமைப்பின் முக்கிய தளபதி அல்தாப் அலி என தெரிய வந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றுக் கொண்டது. மேலும், தொடர் எதிர்தாக்குதல் நடவடிக்கைகளால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
News April 25, 2025
இன்று தோனி நிகழ்த்தபோகும் மாபெரும் ரெக்கார்ட்!

CSK-ன் கேப்டன் தோனி, T20 கிரிக்கெட்டில் இன்று தனது 400-வது மேட்ச்சில் விளையாட இருக்கிறார். இதன் மூலம், இந்த சாதனையை செய்யும் 4-வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். இப்பட்டியலில், ரோஹித் சர்மா (456), தினேஷ் கார்த்திக் (412) விராட் கோலி (407) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். இன்று தோனி CSK-வுக்கு வெற்றியை தேடிக் கொடுப்பாரா?
News April 25, 2025
வினய்யின் படுகொலை குறித்து அறுவெறுக்கத்தக்க கமெண்ட்!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த வினய்யின் படுகொலை குறித்து, ம.பி. இளைஞரின் கமெண்ட் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. அதாவது, ‘வினய்யின் மனைவியை விசாரிக்க வேண்டும். அவரே ஒருவேளை, வாய்ப்பு கிடைத்ததும் ஒருவரை வைத்து கணவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கலாம்’ என கமெண்ட் செய்திருந்தார். நெட்டிசன்கள் இவரை திட்டிதீர்க்கும் நிலையில், ம.பி. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மனசாட்சியே இல்லையா?