News August 28, 2025
USல் இந்தியப் பொருள்களின் விலைகள் அதிகரிப்பு

<<17530648>>டிரம்பின் 50% வரி<<>> விதிப்பால் அமெரிக்காவில் இந்தியப் பொருட்களின் விலை 40% – 50% அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் பல அங்கன்வாடிகளில் இது தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு சுமையாக மாறியுள்ளது. நேற்று முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
Similar News
News August 28, 2025
ரீ ரிலீஸ் லிஸ்ட்டில் இணைந்த ரன்

கடந்த 2002-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் ‘ரன்’. மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக விவேக்கின் காமெடியும் இன்றளவில் ரசிக்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாக லிங்குசாமி அறிவித்துள்ளார். இதன்படி செப்.5-ல் ரீ ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா?
News August 28, 2025
கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு

திடீர் திருப்பமாக அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க இன்னும் வாய்ப்பு இருப்பதாக EX அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். வலிமையான திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று விஜய்க்கு அழைப்பு விடுத்த அவர், அதிமுக வாக்குகள் தவெகவுக்கு செல்லாது எனவும் தெரிவித்தார். மேலும், கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் மற்ற கட்சிகளை விமர்சிக்க விஜய்க்கு உரிமை இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
News August 28, 2025
நுரையீரல் கழிவுகளை நீக்கும் மந்தாரை தேநீர்

மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். இந்தக் கழிவுகளை நீக்கி, பலப்படுத்தும் ஆற்றல் சிவப்பு மந்தாரைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். சிவப்பு மந்தாரை இலை & பூக்கள் (1-2), சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மந்தாரை டீ ரெடி. இந்த டீயை காலையில் குடிக்கலாம். SHARE IT.