News December 22, 2024
கத்தரிக்காய், கொத்தமல்லி விலை சரிவு

கோயம்பேடு சந்தையில் நேற்று முதல்தர கத்திரிக்காய் கிலோ ரூ.70ஆகவும், 2ஆம் தர கத்திரிக்காய் ரூ.30ஆகவும் விற்கப்பட்டது. இன்று முதல் தரம் ரூ.60ஆகவும், 2ஆம் தரம் ரூ.20ஆகவும் குறைந்துள்ளது. கொத்தமல்லி கட்டு நேற்று ரூ.14 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டது. இன்று ரூ.2க்கு விற்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்தே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு காய்கறி வாங்கி செல்லப்பட்டு விற்கப்படுகிறது.
Similar News
News July 6, 2025
IBPS: 1,007 பணியிடங்கள் அறிவிப்பு

வங்கிகளில் காலியாக உள்ள Scale 1 அளவிலான 1,007 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை IBPS வெளியிட்டுள்ளது. பொறியியல் படித்தோரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு & நேர்காணல் அடிப்படையில் செலக்ஷன் நடைபெறும். சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 21. இதுகுறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News July 6, 2025
நடிகை கைலி பேஜ் மரணம்.. போதை மருந்து காரணமா?

ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த இளம் நடிகை கைலி பேஜ்(28) கடந்த 3-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் சடலமாக கிடந்தார். 2016 முதல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட இவருக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர். இந்நிலையில், TMZ சினிமா வலைத்தள தகவலின்படி அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்ததே உயிர்போக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. Say no to drugs
News July 6, 2025
தவெகவால் சிதறும் பாஜக வாக்குகள்?

திமுக & பாஜகவுடன் கூட்டணியில்லை என்று தவெக அறிவித்துவிட்டது. இதனால் தமிழக அரசியலில் பாஜகவுக்கு பெரும் சவால்கள் காத்திருப்பதால், அதனை எப்படி டேக் ஓவர் செய்வது என்பது குறித்து பாஜக பூத் கமிட்டி பயிலரங்கத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ஏற்கெனவே நாதக கணிசமான வாக்குகளைப் பிரிப்பதால், TVK அறிவிப்பும் வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என பாஜக கணித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.