News April 1, 2025
900 மருந்துகளின் விலை உயருகிறது!

நீரிழிவு நோய், இதய நோய்கள் உள்ளிட்ட சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் 900 மருந்துகளின் விலை 1.74% இன்று முதல் உயருகிறது. ரசாயனங்கள், உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள NPPA அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மருந்துகள் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டும் மருந்துகள் விலை உயருகிறது. Ex. வைரஸ் தடுப்பு மருந்தான Acyclovir 200mg 1 மாத்திரைக்கு ₹7.74, 400mg 1 மாத்திரைக்கு ₹13.90 உயருமாம்.
Similar News
News April 2, 2026
IPL: இன்று KKR Vs SRH

IPL-ல், இன்று KKR, SRH அணிகள் கொல்கத்தாவில் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோற்றதால், முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளன. கொல்கத்தா ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம் என்பதால் ஆட்டத்தில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் பறக்க வாய்ப்புள்ளது. எனவே, போட்டியில் சிறப்பாக பந்துவீசும் அணியே வெற்றிபெறும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். யார் ஜெயிக்க வாய்ப்புள்ளது?
News April 2, 2026
திமுகவுக்கு ஓட்டு கிடையாது: மீனவர் நல அமைப்பு

வரும் தேர்தலில் தங்களின் ஆதரவு திமுகவுக்கு இல்லையென தென்னிந்திய மீனவர் நல சங்கம் அறிவித்துள்ளது. 2021-ல் திமுக சார்பில் வெற்றிபெற்ற மீனவர் சமுக வேட்பாளருக்கு அமைச்சரவையில் இடமளிக்க கோரிக்கை வைத்ததாக தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் பாரதி தெரிவித்துள்ளார். ஆனால் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை, இம்முறை வாய்ப்பும் அளிக்காததால் திமுகவை புறக்கணித்து, மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் என கூறியுள்ளார்.
News April 2, 2026
இன்றைய நல்ல நேரம்

ஏப்ரல் 2, பங்குனி 19 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்


