News October 5, 2025

மளமளவென குறைந்த விலை.. உச்சிக்கு சென்ற விற்பனை

image

GST மறுசீரமைப்பு செய்யப்பட்டதன் காரணமாக டூவிலர் விலை குறைந்தது. இதன் எதிரொலியாக, 2024 செப்., விற்பனையுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு செப்டம்பரில் டூவிலர் விற்பனை 9% அதிகரித்துள்ளது. மொத்தம் 20 லட்சத்து 59 ஆயிரம் டூவிலர்கள் செப்டம்பரில் மட்டும் விற்பனையாகியுள்ளது. தீபாவளி பண்டிகை கால விலை தள்ளுபடி, சலுகைகள், GST குறைப்பால் அக்டோபரில் டூவிலர் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 12, 2026

எம்ஜிஆரை இழிப்படுத்திய நடிகர்.. விஷால் கண்டனம்!

image

* <<19348306>>எம்ஜிஆரை <<>>அவதூறாக பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார் * ரவி மோகனின் ‘Bro code’ படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளது *ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படம் இதுவரை 57.9 கோடி வசூலித்துள்ளதாம் *‘மெளனம் பேசியதே’ படத்திற்கு பிறகு அமீரின் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என தகவல் வெளிவந்துள்ளது.

News March 12, 2026

தமிழக கவர்னராக R.V.அர்லேக்கர் பதவியேற்றார்

image

தமிழகத்தின் புதிய பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு சென்னை HC-ன் தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்றார். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தற்போது கேரளாவின் கவர்னராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

News March 12, 2026

பொதுத்தேர்வு மையங்களில் மேலும் கட்டுப்பாடு!

image

சில நாள்கள் முன், திருநெல்வேலியில் ஜெராக்ஸ் கடையில் மினி ஜெராக்ஸ் எடுத்து மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகளை கண்காணிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்கு இடமான நிகழ்வுகள் கடைகளில் நிகழ்ந்தால், உடனடியாக கலெக்டர்களிடம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!