News September 3, 2025
விலை குறைகிறது… இன்று முக்கிய முடிவு

மோடி சொன்ன ‘<<17521105>>தீபாவளி பரிசுக்காக<<>>’ பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்றும் நாளையும் நடைபெறும் GST கவுன்சில் கூட்டத்தில் 5%, 18% என 2 அடுக்குகளாக கொண்டுவருவது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்க்கரை உள்ளிட்ட பலசரக்கு முதல் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், எலக்ட்ரிக் கார், சிகரெட் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
Similar News
News September 4, 2025
சீனாவை தொடர்ந்து சிங்கப்பூருடன் அதிக நெருக்கம்!

டெல்லியில் சிங்கப்பூர் PM லாரன்ஸ் வாங் உடன் PM மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பேசிய PM மோடி, பஹல்காம் தாக்குதல் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததற்கு சிங்கப்பூர் அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், வர்த்தகம், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சிகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளதாகவும் கூறினார்.
News September 4, 2025
+2 பொதுத்தேர்வில் மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு

10 KM தூரத்திற்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே சென்டர் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. Exam சென்டருக்கு விண்ணப்பிக்கும் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும் எனவும், வரும் 15-ம் தேதிக்குள் கருத்துருவை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா ஆணையிட்டுள்ளார். அரசின் இந்த முடிவால் பல லட்சம் பள்ளி மாணவர்கள் பலனடைவர்.
News September 4, 2025
GST உயர்வு.. ரசிகர்களுக்கு கனவாக மாறும் IPL!

GST வரி மாற்றங்களில், IPL டிக்கெட் விலைகளுக்கான வரி 28%-ல் இருந்து 40% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், குறைந்தபட்சமாக விற்கப்படும் ₹500 டிக்கெட், இனி ₹700-ஐ தாண்டும் என கூறப்படுகிறது. இது டிக்கெட் விலையை மட்டுமின்றி, ஒட்டுமொத்த விளையாட்டையும் பாதிக்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. பணக்காரர்களின் விளையாட்டாக மாறி, IPL சாமானிய ரசிகர்களுக்கு கனவாக மாறிவிடுமோ என்ற கேள்வியும் எழுகிறது.