News September 30, 2025

வரலாறு காணாத விலை உயர்வு.. இதுவே முதல்முறை

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ₹1 உயர்ந்து ₹161-க்கும் கிலோ வெள்ளி ₹1,61,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ளி விலை இதுவரை இல்லாத உச்சமாக ₹16 ஆயிரம் உயர்ந்துள்ளது. வரும் நாள்களிலும் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Similar News

News September 30, 2025

TNPSC தேர்வர்களுக்கு ஹேப்பி: காலியிடங்கள் அதிகரிக்கும்

image

TNPSC கேள்வித்தாள்களை பிழையின்றி தயாரிக்க நிபுணர் குழுவை அறிவுறுத்தியுள்ளதாக, அதன் தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். தவறான கேள்விகளை வடிவமைக்கும் நிபுணர்களை பணியில் இருந்து மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சில நேரங்களில் பிழைகள் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறதாகவும் குறிப்பிட்டார். மேலும் குரூப் 2, 2-A பதவிகளில் காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

News September 30, 2025

விஜய் ஏன் களத்தில் இல்லை? ஆ.ராசா MP

image

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான கருத்தை ஆதவ் அர்ஜுன பதிவிட்டுவிட்டு நீக்கியுள்ளதாக ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனாவை விஜய் கட்சியை விட்டு நீக்காமல் தன்னுடன் வைத்திருப்பது ஏன் என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் விபத்து நடந்தபோது களத்தில் நிற்காமல் விஜய் ஓடி வந்தது ஏன் எனவும் ஆ.ராசா வினவியுள்ளார்.

News September 30, 2025

BREAKING: விஜய் குறித்து நீதிபதி சொன்ன வார்த்தை

image

கரூர் துயர வழக்கில், CM, EPS வந்தால் கட்சியினர் மட்டுமே பார்க்க வருவார்கள்; ஆனால் டாப் ஸ்டாரான விஜய் வந்தால் குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள் என தெரியாதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். விஜய் பரப்புரை என்றால் மாநாடு போலதான். பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள் எனும்போது 10,000 பேர் என கணித்ததே தவறு. கூட்டம் அளவு கடந்து சென்றது தெரிந்தும் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!