News October 6, 2025

விலை புதிய உச்சம்.. ஒரே நாளில் ₹1000 உயர்வு..

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிராம் வெள்ளியின் விலை ₹1 உயர்ந்து ₹166-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாளில் மட்டும் வெள்ளி விலை ₹5 ஆயிரம் அதிகரித்துள்ளது. விலை குறையும் என்று எதிர்பார்த்த நகை பிரியர்கள், விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News October 6, 2025

BREAKING: தலைமை நீதிபதி BR கவாய் மீது செருப்பு வீச முயற்சி

image

உச்சநிதிமன்ற தலைமை நீதிபதி (CJI) பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் காலணியை வீச முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுக்க முடியாது என்று கூக்குரலிட்டபடி CJI-ஐ தாக்க முயற்சித்த அவரை, அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தினார்கள். இதனால் எந்த பதற்றமும் அடையாத தலைமை நீதிபதி, இதுபோன்ற நிகழ்வுகள் என்னை பாதிக்காது என கூறிவிட்டு தனது பணியை தொடர்ந்தார்.

News October 6, 2025

BREAKING: தீபாவளி போனஸ் அறிவித்தார் CM ஸ்டாலின்

image

அனைத்து அரசு பொதுத்துறை சி, டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிரந்தர பணியாளர்கள் குறைந்தபட்சம் ₹8,400 முதல் அதிகபட்சம் ₹16,800 வரை போனஸாக பெறுவார்கள். போனஸ் வழங்க ஏதுவாக ₹376 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News October 6, 2025

வள்ளலார் சர்வதேச மாநாடு நடத்த அரசு திட்டம்

image

சென்னையில் விரைவில் வள்ளலார் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மாநாட்டில் வள்ளலாருக்கு பெருமை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள 24 சன்மார்க்கிகளை சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் வள்ளலார் குறித்து நூல் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!