News September 26, 2025
ஒரே நாளில் விலை ₹3000 உயர்வு.. இதுவே முதல்முறை

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1 கிராம் வெள்ளி ₹3 அதிகரித்து ₹153-க்கும், கிலோ வெள்ளி ₹3000 அதிகரித்து ₹1,53,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 9 நாள்களில் மட்டும் சுமார் ₹11,000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News September 26, 2025
EPS-ஐ மன்னித்துவிடலாம்: செல்வப்பெருந்தகை

பிச்சைக்காரர் போட்டிருக்கும் ஒட்டு போட்ட சட்டை போல பல கட்சிகளுக்கு சென்று வந்தவர் செல்வப்பெருந்தகை என்று EPS விமர்சித்திருந்தார். இந்நிலையில், வன்மமான கருத்து என கூறியுள்ள செல்வப்பெருந்தகை, EPS-க்கு வயதாகிவிட்டதால் மன்னித்து விடலாம் என பதிலளித்துள்ளார். மேலும், EPS-க்கு அரசியல் செய்ய தெரியவில்லை என்றும், காங்., தலைவர்களிடம் அரசியல் செய்ய கற்றுக் கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
News September 26, 2025
28-ம் தேதி ட்ரீட் கொடுக்கும் விஜய் சேதுபதி!

தலைவன் தலைவி படத்திற்கு பிறகு, விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தை தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடிக்க, தபு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
News September 26, 2025
விஜய் பிரசாரத்தை முறியடிக்க பரிசு கொடுக்கும் திமுக?

கரூரில் TVK தலைவர் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்ள போலீஸ் அனுமதியளித்துள்ளது. திமுகவின் கோட்டையாக மாறியிருக்கும் கரூரில் விஜய்க்கு அதிகளவில் கூட்டம் சேரக் கூடாது என்பதில் செந்தில் பாலாஜி உறுதியாக இருக்கிறாராம். இதனால், விஜய்யின் பரப்புரைக்கு செல்வதை தடுக்க பரிசு பொருள்கள் வழங்குவதுடன், வாகனங்களில் வரும் தவெகவினரை திசை திருப்பும் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.