News September 21, 2025
விலை குறைந்தது…

IRCTC சார்பில் ரயில்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் வாட்டர் பாட்டில் விற்கப்படுகிறது. GST வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதை அடுத்து, ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ₹15லிருந்து ₹14-ஆகவும், அரை லிட்டர் பாட்டில் ₹10லிருந்து ₹9-ஆகவும் IRCTC குறைத்துள்ளது. எனவே, இனி ரயில்களில் பயணிப்போர் கூடுதல் விலை கொடுத்து வாட்டர் பாட்டிலை வாங்க வேண்டாம்; ஒரு லிட்டர் வாட்டருக்கு ₹14 கொடுத்தாலே போதும்.
Similar News
News September 21, 2025
EPS – நயினார் சந்திப்பு: பின்னணி என்ன?

சேலத்தில், EPS-ஐ அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார். கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை EPS சந்தித்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதில், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், KP ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அக்.1 முதல் நயினார் தனது பரப்புரையை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு அழைப்பு விடுக்கவே இந்த சந்திப்பு என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
News September 21, 2025
நடிகர் ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை

மறைந்த ரோபாே சங்கர் மகள் இந்திரஜாவின் குழந்தைக்கு இன்று உசிலம்பட்டி அருகே காதணி விழா நடைபெறவிருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தானே முன்னின்று பார்த்து பார்த்து செய்த ரோபோ சங்கர், பேரனை தனது மடியில் வைத்து காது குத்த வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் இருந்தார். ஆனால், எமன் அவரை விட்டுவைக்கவில்லை. அவரது ஆசை நிராசை ஆனதால், விழாக்கோலம் பூண வேண்டிய வீட்டில் சோக மேகம் சூழ்ந்தது.
News September 21, 2025
Gemini AI போட்டோக்களை WhatsApp-லேயே உருவாக்கலாம்

தற்போது ட்ரெண்டில் இருக்கும் Gemini AI போட்டோக்களை WhatsApp-லேயே எளிதில் உருவாக்கலாம். இதற்கு, ➤WhatsApp-ல் +1 (833) 436-3285 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும் ➤இது Perplexity AI மூலம் Nano Banana இன்ஜினுக்கு செல்லும் ➤நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போட்டோவையும், Prompt-ஐயும் கொடுங்கள் ➤சில நொடிகளில் நீங்கள் கேட்ட AI படம் தயாராகிவிடும். 99% பேருக்கு தெரியாத இத்தகவலை நீங்க SHARE பண்ணுங்க.