News January 24, 2025
வேலையில் Pressure-ஆ? அது உங்களுக்கு மட்டும் இல்லை!

25 வயசுக்குள்ள இருக்க, Corporate ஊழியர்கள் 90% பேருக்கு Anxiety அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வு எச்சரிக்கிறது. பணிச்சூழல், வேலை அழுத்தம், லீவு இல்லாதது… இப்படி பல காரணங்கள் ஊழியர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதாம். 2023இல், 19% ஆக இருந்த தற்கொலை ரிஸ்க், 2024இல் 22% ஆக அதிகரித்துள்ளது. ஒரு வேலை போனா, இன்னொரு வேலை கிடைக்கும். ஆனா உயிர் ஒன்னுதான். Take Care, Guys!
Similar News
News November 23, 2025
மஞ்சள் கலந்து நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

*மஞ்சள் நீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
*அஜீரணம், நெஞ்செரிச்சல், வாயு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு மஞ்சள் கலந்த வெந்நீர் குடிப்பது நல்லது என கூறுகின்றனர். *கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது நல்லதாம். *ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த நீர் உதவுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
News November 23, 2025
NATIONAL 360°: துப்பாக்கி வெடித்து காவலர் பலி

*ஹரியானாவில் 18 வயது பூர்த்தியாகாத நபர் ஓட்டிய கார் மோதியதில் 8 வயது சிறுவன் பலியான சோகம். *குஜராத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பள்ளி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நபரை தேடி வரும் போலீசார். *ஜார்க்கண்டில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் காவலர் பலி. *மகாராஷ்டிரா DCM அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்.
News November 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 527
▶குறள்:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
▶பொருள்: அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.


