News March 28, 2024

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்?

image

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதை துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா சூசகமாக தெரிவித்துள்ளார். சிறையில் இருந்தபடியே முதல்வர் பணியை கெஜ்ரிவால் தொடர்வார் என ஆம் ஆத்மி தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, சிறையில் இருந்து அரசு இயங்காது என உறுதியளிக்கிறேன் என்று பதிலளித்தார். அதாவது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வாய்ப்பு இருப்பதை அவர் சூசகமாக தெரிவித்தார்.

Similar News

News March 24, 2026

சுங்​கச்​சாவடி கட்​ட​ணம் உயர்கிறது

image

தமிழகத்​தில் 60 சுங்​கச்​சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5% சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னை – கன்​னி​யாகுமரி, திருச்சி – சேலம், சேலம் – கோவை உள்​ளிட்ட தேசிய நெடுஞ்​சாலைகள் உள்ள சுங்கச் சாவடிகளில் இந்த கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது. ஏற்கெனவே போர் சூழலால் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 24, 2026

வரலாற்றில் இன்று

image

➤1837 – கனடாவின் கறுப்பினக் குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. ➤1882 – காச நோயை உருவாக்கும் நோய்க்கிருமியை கண்டுபிடித்ததாக ராபர்ட் கோக் அறிவித்தார். ➤1977 – நெருக்கடி நிலைக்குப் பிறகு இந்தியாவின் 4-வது பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்றார். ➤1922 – பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் பிறந்த தினம். ➤1988 – பின்னணிப் பாடகர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மறைந்த நாள்.

News March 24, 2026

இந்தியா நோக்கி புறப்பட்ட அடுத்த 2 கப்பல்கள்

image

ஹார்முஸ் நீரிணையில் இருந்து அடுத்த 2 கப்பல்கள் இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளன. பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த என்ற கப்பல்கள் 92,000 டன் LPG உடன் ஓரிரு நாள்களில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 3 இந்திய கப்பல்கள் வெற்றிக்கரமாக வந்தடைந்தன. மேலும், ஹார்முஸ் நீரிணையில் பல்வேறு நாடுகளை 500-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது

error: Content is protected !!