News October 20, 2025
தீபாவளிக்கு ஜனாதிபதி வைத்த கோரிக்கை

தீபாவளியையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அறியாமையின் மீது அறிவின் வெற்றியை இந்த பண்டிகை குறிப்பதாக கூறிய அவர், மக்களிடையே அன்பு மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும், இப்பண்டிகையை பொறுப்பாகவும், சுற்றுசூழலுக்கு தீங்கிழைக்காமலும் கொண்டாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News March 14, 2026
தவெகவில் இருந்து நீக்குக.. விஜய்க்கு பரபரப்பு கடிதம்

‘அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களை கட்சியை விட்டு விலக்குங்கள்’ என விஜய்க்கு பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி கடிதம் எழுதியுள்ளார். ரஜினி குறித்து ஆதவ் உள்ளிட்டோர் அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துகளால் தேவையற்ற மோதல்களையும், மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர். தங்கள் மீதுள்ள மரியாதையும், அவர்களின் பேச்சால் பதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால், கட்சியில் இருந்து நீக்குங்கள் என கூறியுள்ளார்.
News March 14, 2026
சசிகலா கட்சி சின்னமும் ஜெ., அழைப்பும்.. REWIND

அஇபுதமமுக கட்சியில் இணைந்துள்ள சசிகலா, அக்கட்சிக்கான தென்னந்தோப்பு சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். இதற்கு முன்பாக 2016-ல் தமாகாவுக்கு இச்சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது இரட்டை இலையில் போட்டியிடுமாறு ஜெ., அழைத்தும், GK வாசன் செல்லவில்லை. தென்னந்தோப்பு சின்னத்தில் தோல்வியடைந்த அவர், பின்னாளில் அதிமுக சின்னத்திலேயே போட்டியிட்டு ராஜ்யசபா MP ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 14, 2026
BREAKING: வீட்டு சிலிண்டர்.. CM ஸ்டாலின் ஹேப்பி நியூஸ்

சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு என்ற செய்திதான் கடந்த 2 நாள்களாக மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சிலிண்டர் தேவை, கையிருப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், தட்டுப்பாட்டை போக்கவும், பொதுமக்கள் அனைவருக்கும் வீட்டு உபயோக சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.


