News April 5, 2025
அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் $10 டிரில்லியன் இழப்பு!

உலக நாடுகள் மீதான ரெசிப்ரோக்கல் வரி(Reciprocal Tariff) விதிப்பால் அமெரிக்கப் பங்குச்சந்தை 2ஆவது நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. Dow Jones பங்குச்சந்தையில் 2,200 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடியை இழந்துள்ளனர். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு சுமார் $10 டிரில்லியன் டாலரை அமெரிக்க முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 5, 2025
தங்கம் விலை பாதியாக குறையுமா?

தங்கம் விலை கடந்த 2 நாள்களாக சரிந்து வரும் நிலையில், பாதியாக குறையும் என பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து கூறி வருகின்றனர். இது தொடர்பாக பொருளாதார வல்லுநர்களிடம் கேட்டபோது, உலக அளவில் முதலீட்டுக்காக தங்கம் வாங்குவது குறைந்தது மற்றும் டிரம்பின் புதிய வரி விதிப்பே காரணம் என்றனர். மேலும், ஒரு சில நாள்களுக்கு இந்த நிலை நீடிக்கும் ஆனால், பாதியாகக் குறைய வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளனர்.
News April 5, 2025
பச்சை, பிரவுன் நிறத்தில் மட்டும் ஏன் பீர் பாட்டில்கள் உள்ளன?

பெரும்பாலும் ஏன் பீர் பாட்டில்கள் பச்சை அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கிறது என நீங்கள் யோசித்தது உண்டா? அதற்கு பின்னால் ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. ஆம், பீர் transparent பாட்டில்களில் வைக்கப்பட்டால், சூரியனின் UV கதிர்களால் அவை பாதிக்கப்படுமாம். 2 ஆம் உலகப் போரின்போது, பிரவுன் பாட்டில்களுக்கு திடீர் பற்றாக்குறை வந்ததால், பச்சை நிற பாட்டில்கள் சந்தைக்கு வந்தன. SHARE IT.
News April 5, 2025
IPL 2025: DC முதலில் பேட்டிங்

CSK அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற DC பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று CSK மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என CSK ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இன்னைக்கு யார் ஜெயிப்பாங்க என நீங்க நினைக்கிறீங்க?