News February 10, 2025

கும்பமேளாவில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர்

image

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (பிப்.10) மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளார். இதையொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. PM மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கெனவே நீராடி சென்றுள்ளனர். இதுவரை 35 கோடிக்கும் அதிகமான மக்கள் நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, வரும் 26ம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

Similar News

News February 10, 2025

திமுக அமைச்சர் ஜெயில் செல்வார்: அண்ணாமலை

image

2026ஆம் ஆண்டு தே.ஜ. கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைத்தவுடன் சிறைக்கு செல்லப் போகும் முதல் நபராக அமைச்சர் காந்தி இருப்பர் என்று அண்ணாமலை பேசியுள்ளார். பொங்கல் தொகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஆண்டுதோறும் அமைச்சர் காந்தி ஊழல் செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அவரை உடனடியாக முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

News February 10, 2025

5 கிமீ போக 5 மணிநேரம்… திக்கித் திணறும் டிராபிக் ஜாம்

image

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என பல லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பிரக்யாராஜ் செல்கிறார்கள். இதனால், அந்நகரமே ஸ்தம்பித்துள்ளது. கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல், பிரக்யாராஜ் சங்கம் ரயில் நிலையம் மூடப்பட்டு விட்டது. மேலும், சுமார் 300 கிலோ மீட்டருக்கு உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

News February 10, 2025

இந்திய அணியின் முதல் வெற்றி

image

கிரிக்கெட்டில் இந்திய அணி தன் முதல் வெற்றியை பதிவுச் செய்து 73 ஆண்டுகள் ஆகிறது. 1952-ம் ஆண்டில், பிப்.10-ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில், இந்தியா ஒரு இன்னிங்ஸ் 8 ரன் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்து 266 & 183 ரன் எடுக்க, இந்தியா 459/9 எடுத்து டிக்ளேர் செய்தது. பங்கஜ் ராய்(111), பாலி உம்ரிகர்(130) இருவரும் சதமடித்தனர். அப்போது வீரர்களுக்கு வெற்றிப் பரிசாக தலா ரூ.250 வழங்கப்பட்டதாம்.

error: Content is protected !!