News September 1, 2025
தமிழகம் வருகிறார் ஜனாதிபதி முர்மு

3 நாள்கள் பயணமாக ஜனாதிபதி திரெளபதி முர்மு கர்நாடகா மற்றும் தமிழகம் வருகிறார். இன்று மைசூரில் நடைபெறும் AIISH வைர விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து நாளை (செப்.2) தமிழகம் வரும் அவர், சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன நாளில் பங்கேற்கிறார். செப்.3-ல் திருவாரூர் மத்திய பல்கலையின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு டெல்லி திரும்புகிறார்.
Similar News
News September 1, 2025
அச்சாணியாக புதிய தமிழகம் கட்சி: கிருஷ்ணசாமி

சமீப காலமாகவே தவெகவை அரவணைத்துச் செல்வது போன்றே கிருஷ்ணசாமியின் பேச்சு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதியாக வரும் என்று தெரிவித்துள்ள அவர், அந்த ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அச்சாணியாக விளங்கும் என்று கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
News September 1, 2025
பன்னாட்டு தலைவர்களுடன் மோடி பரஸ்பர நல்லுறவு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் PM மோடி கலந்துகொண்டார். அப்போது, நேபாளம், மாலத்தீவு, எகிப்து, பெலாரஸ், டஜிகிஸ்தான், கஜகஸ்தான், வியட்நாம், துர்க்மெனிஸ்தான், Lao PDR, மியான்மர், அர்மேனியா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர், பிரதமர்களை பரஸ்பர மரியாதையுடன் மோடி சந்தித்தார். இதன் மூலம் அந்த நாடுகளுடனான உறவு வலுப்படும் என்றும் PM தெரிவித்துள்ளார்.
News September 1, 2025
பார்வை ஒன்றே போதும்.. ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

‘அந்த கண்களுக்காகவே காலம் முழுவதும் அவளை பார்த்துக் கொண்டே இருக்கலாம்’ என்று ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர். கருப்பு சேலையில், பட்டும் படாத வெளிச்சத்தில் லீலா பார்வையாலேயே கட்டிப்போடும் போட்டோஸை மேலே பார்த்து நீங்களும் ஒரு கவிதை சொல்லுங்களேன்.. இவர் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.