News June 2, 2024
புதிய எம்.பி.க்களை வரவேற்க நடந்துவரும் ஏற்பாடுகள்

18ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய எம்.பி.க்களை வரவேற்க நாடாளுமன்ற வளாகத்தில் முக்கிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது . ஹவுஸ் கமிட்டியால் தங்குமிடம் வழங்கப்படும் வரை, எம்.பி.க்கள் தங்க அரசு விருந்தினர் இல்லங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அவர்கள் பயணப்பட போக்குவரத்து வசதிகள் & மருத்துவ வசதிகளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News September 20, 2025
இன்று SUPER 4 சுற்று தொடக்கம்: SL vs BAN வெல்வது யார்?

ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இலங்கை vs வங்கதேச அணிகள் மோதுகின்றன. வழக்கம் போல் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முன்னதாக, இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை, இலங்கை வென்றிருந்தது. அதேபோல், ஆஃப்கனையும் வீழ்த்தி, இந்த சுற்றுக்கு தகுதிபெற வங்கதேச அணிக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
News September 20, 2025
திமுக கூட்டணியில் இருந்து விலகலா?

ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகளை கேட்பது என கே.எஸ்.அழகிரி கூறியதால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது, மறைமுகமாக தவெகவுடன் காங்., செல்வதற்கான சமிக்ஞை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்க நெருக்க, இதுபோன்ற கருத்துகள் வலுவடையும் என்றும், விஜய் உடன் காங்., நெருக்கமாக இருப்பதால் கடைசி நேரத்தில் கூட காங்., TVK பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
News September 20, 2025
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

காலையில் வீட்டை சுத்தம் செய்து, சொம்பு ஒன்றில் நாமமிட்டு துளசி மாலையை சுற்றி, அதில் சிறிது நேரம் அரிசியை போட்டு, பெருமாள் படத்தின் முன் வைக்கவும். இந்த அரிசியில்தான், பூஜைக்கும் பயன்படுத்த வேண்டும். நைவேத்தியமாக புளி சாதம், சர்க்கரை பொங்கல், வடை படைக்கலாம். துளசி தீர்த்தம் & மாவிளக்கு கட்டாயம். பூஜை செய்யும் போது, வீட்டில் அனைவரும் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். SHARE IT.