News April 1, 2024
ஏப்ரல் 12ஆம் தேதி OTT-க்கு வரும் ‘பிரேமலு’

நஸ்லன், மமிதா பைஜு நடித்த ‘பிரேமலு’ திரைப்படம், ஏப்.12ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. நகைச்சுவை + காதல் கதைக்களத்தில் உருவான இப்படம், கடந்த பிப்.9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்நிலையில், மலையாளம், தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் OTT-இல் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Similar News
News January 22, 2026
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதால், ஜனவரி மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், ரேஷன் பொருள்களை வழங்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படும் என கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், எந்த ரேஷன் கடையிலும் பொதுமக்கள் தங்களுக்கான ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். SHARE IT.
News January 22, 2026
திமுகவில் போட்டியிடவில்லை: நடிகர் SV சேகர் அறிவித்தார்

திமுகவுக்கு ஆதரவாக பேசிவரும் நடிகர் SV சேகர், மயிலாப்பூர் தொகுதியில் களமிறங்க முயல்வதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், தேர்தல் அரசியலிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பும், பாஜகவிலிருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பும் விலகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பிரசாரம் செய்வதோடு, CM ஸ்டாலினுக்கு துணை நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
ஒரு பெண்ணுக்கு 11 குழந்தைகள் பிறந்தன ❤️❤️

நவீன காலத்தில் பெண்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதே அரிது. ஹரியானாவில் 1 பெண் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட தம்பதிக்கு முதல் பத்தும் பெண் குழந்தைகளாகவே பிறந்ததாம். 19 ஆண்டுகால காத்திருப்புக்கு பின், 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய்க்கு ரத்த சோகை இருந்ததால், ஆபத்தான முறையில் பிரசவம் பார்த்தாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.


