News April 12, 2024

‘பிரேமலு’ OTT-இல் வெளியானது

image

நஸ்லேன், மமிதா பைஜூ நடித்துள்ள ‘பிரேமலு’ (மலையாளம்) திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழியில் வெளியாகியுள்ளது. கிரீஷ் இயக்கத்தில் நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இப்படம், கடந்த பிப்.15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், ₹130 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. நீங்க படம் பாத்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?

Similar News

News January 14, 2026

கூட்டணி.. ஒரே முடிவில் EPS, OPS, பிரேமலதா

image

பிரேமலதா (தேமுதிக), ஓபிஎஸ் ஆகியோர் தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறி வருகின்றனர். இதனால் தை முதல் நாளான நாளை கூட்டணி பற்றிய நிலைப்பாட்டை இருவரும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தைப்பொங்கல் வாழ்த்து கூறிய இபிஎஸ்ஸும், தை பிறந்தால் வழி பிறக்கும் என தெரிவித்துள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது. ஏற்கெனவே, NDA கூட்டணியுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

News January 14, 2026

மகளிருக்கு ₹5,000 மானியம்.. அரசு அறிவிப்பு

image

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் தொழில் தொடங்க அரசு மானியம் அறிவித்துள்ளது. இதற்கு, பிறப்புச் சான்று, BLP கார்டு(வறுமைக் கோட்டு அட்டை), வருமானச் சான்று ஆகிய ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்களுடன், தகுதியுடைய பெண்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ₹10,000-க்கு மேல் உள்ள கிரைண்டர் வாங்க 50% அல்லது ₹5,000 மானியமாக வழங்கப்படுகிறது.

News January 14, 2026

பால் பொங்கல் செய்ய சிம்பிள் ரெசிபி

image

*நன்றாக கழுவிய பச்சரிசியுடன் பால் மற்றும் 4 டீஸ்பூன் நெய் சேர்த்து குழைவாக வேகவைக்கவும். *பின்னர் அதனுடன் ஏலக்காய் தூள், வெல்லம் சேர்த்து கிளறவும். *இதனுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால் சுவையான பால் பொங்கல் ரெடி. குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவர்.

error: Content is protected !!