News March 21, 2024
தொகுதி பொறுப்பாளர்களுக்கு பிரேமலதா கொடுத்த ஆஃபர்

அதிக வாக்குகளை பெற்றுத் தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், “அதிமுக – தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த ராசியான கூட்டணி. மக்கள் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும்” எனத் தெரிவித்தார்.
Similar News
News November 20, 2025
மெட்ரோ விவகாரத்தில் நடந்தது என்ன? மத்திய அரசு விளக்கம்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் பாஜக அரசியல் செய்வதாக CM ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில், TN அரசு பரிந்துரைத்துள்ள 7 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை எனவும் அதனால்தான் திருப்பி அனுப்பியதாகவும் மத்திய அமைச்சர் மனோகர்லால் விளக்கமளித்துள்ளார். மேலும், மக்களுக்கான மெட்ரோ திட்டத்தை ஸ்டாலின் தான் அரசியல் ஆக்குகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News November 20, 2025
உலகின் மீள நீளமான 7 நதிகள்!

நதிகள் என்பவை ஒவ்வொரு கண்டத்தின் நிலப்பரப்பிலும் ஆழமாக பதிந்திருக்கும் பூமியின் ரத்த நாளங்கள் போன்றவை. உலகிலேயே மிகவும் நீளமாக உள்ள நதி 11 நாடுகள் வழியாக பாய்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல நமது கங்கை நதியை விட மூன்று மடங்கும் அதிக நீளம் கொண்டது. எந்த நதி என்று தெரிந்து கொள்ளவும், உலகின் மிக நீளமான மற்ற நதிகள் எதுவென்று அறியவும் மேலே SWIPE பண்ணுங்க.
News November 20, 2025
BREAKING: தமிழக அரசுக்கு வெற்றி.. பரபரப்பு தீர்ப்பு

பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஒரு நியாயமான காலத்திற்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஒரு மாநிலத்திற்கு 2 அதிகார அமைப்புகள் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மசோதா காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டால் கோர்ட் ஆய்வு செய்யும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால், TN அரசுக்கு கிடைத்த வெற்றி என அரசு தரப்பினர் கொண்டாடுகின்றனர்.


