News September 28, 2025
கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ₹11 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும், கருவுற்றது முதல் குழந்தை பிறந்தது வரை என 3 தவணைகளில் பணம் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க https://pmmvy.wcd.gov.in இணையதளத்தை பார்வையிடுங்கள். இந்த முக்கிய திட்டத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
Similar News
News September 28, 2025
கரூரில் நடந்தது என்ன? கலெக்டர் விளக்கம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய 110 பேர் அரசு, தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தங்கவேலு தெரிவித்துள்ளார். பெரும் அசம்பாவிதம் நடந்த உடனேயே மீட்பு பணிகளை முதலமைச்சர் முடுக்கிவிட்டதாக கூறிய அவர், அரசின் உடனடி நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News September 28, 2025
ACC தலைவரிடம் கோப்பையை பெறுமா இந்தியா?

ஆசிய கோப்பை ஃபைனலில் இன்று இந்தியா, பாகிஸ்தான் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரிடம் இருந்து கோப்பையை பெறும். தற்போது ACC தலைவராக இருப்பவர் பாக்., அமைச்சர் நக்வி. எனவே, இன்று இந்தியா வென்றால், அவரிடம் இருந்து கோப்பையை பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. மேலும், ஃபைனலுக்கு முந்தைய கேப்டன்கள் போட்டோஷூட்டை இந்திய புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 28, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் நாளை இயங்காது

கரூர் பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை(செப்.29) மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கர் பேரவை அறிவித்துள்ளது. நாளை மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மெடிக்கல், பால் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். SHARE IT.