News February 26, 2025
பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோரை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பி.கேவிடம் எதிர்கால அரசியல், 2026 தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்திலும் பி.கே உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
Similar News
News February 26, 2025
சிவராத்திரியில் உங்கள் ராசிக்கான வழிபாடு? (1/2)

*மேஷம்: சிவாலயத்திற்கு பச்சரிசி, துவரம் பருப்பை தானமாகக் கொடுங்கள் *ரிஷபம்: அபிஷேகத்திற்கு பால், பன்னீர், இளநீர் வாங்கி கொடுங்கள் *மிதுனம்: வில்வம் சமர்ப்பித்து வழிபடுங்கள் *கடகம்: பால், இளநீர், சந்தனம், தேனை சிவாலயங்களில் சமர்ப்பியுங்கள் *சிம்மம்: அபிஷேகத்துக்கு விபூதி மற்றும் நாகலிங்கப் பூ, செண்பகம் ஆகிய மலர்களை வாங்கிக்கொடுங்கள் *கன்னி: வில்வம் சமர்ப்பித்து, தயிர்சாதம் நிவேதனம் செய்யுங்கள்.
News February 26, 2025
சிவராத்திரியில் உங்கள் ராசிக்கான வழிபாடு? (2/2)

துலாம்: சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து கண் குளிரப் பாருங்கள் *விருச்சிகம்: சிவனடியார்களுக்கு வஸ்திர தானம் செய்து சிவாலயத்தில் வழிபடுங்கள் *தனுசு: தட்சிணாமூர்த்தி சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுங்கள் *மகரம்: சிவாலயங்களில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் *கும்பம்: வில்வம், முல்லை மலர்கள் சாத்தி வழிபடுங்கள் *மீனம்: சிவாலயங்களில் நடைபெறும் ஒரு கால பூஜையில் கலந்துக்கொண்டு, விளக்கேற்றி வழிபடுங்கள்.
News February 26, 2025
AI வீடியோவால் அமெரிக்க அதிபர் ‘அப்செட்’

அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்கின் கால்களை முத்தமிடுவது போன்ற AI வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு விவகாரங்களில் எலான் மஸ்குக்கு அதிக அதிகாரங்களை டிரம்ப் வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அமெரிக்க அரசு அலுவலகத்தில் இந்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் அதிருப்தியில் உள்ள டிரம்ப் நிர்வாகம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது.