News November 23, 2024
பிஹாரில் பிரசாந்த் கிஷோருக்கு கடும் பின்னடைவு!

பிஹாரில் நடந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ்(Jan Suraaj) கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்தக் கட்சி போட்டியிட்ட தாராரி, ராம்கர், இமாம்கஞ்ச், பெலகஞ்ச் தொகுதிகளில் ஜன் சுராஜ் 3 மற்றும் 4ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த மாதம் 2ஆம் தேதி ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 8, 2025
இந்திய அணியில் RCB வீரருக்கு வாய்ப்பு?

ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, சிராஜ், கில், பண்ட், ராகுல் இடம்பெறமாட்டார்கள் என தகவல் வெளியாகிவுள்ளது. இந்நிலையில் க்ருணால் பாண்ட்யா அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. RCB அணிக்காக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாம். கடைசியாக 2021-ம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடிய க்ருணால் சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்பு அணிக்கு திரும்புகிறார்.
News August 8, 2025
அதிமுக ஆப்ஷனை மூடிய விஜய்: 3 காரணங்கள்

அதிமுகவை இதுநாள் வரை மென்மையாக அணுகிவந்த விஜய், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணி ஆப்ஷனை விஜய் ஒதுக்கிவைத்ததற்கான 3 முக்கிய காரணங்கள். *EPS பலம்பெறுவது எதிர்காலத்தில் தவெக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் *திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது பாஜக, நாதக வளர்ந்தது போல தவெகவும் வளரும் * நடுநிலை வாக்குகளை இழக்க நேரிடும் என்ற முன்னெச்சரிக்கை. விஜய்யின் முடிவு சரியா?
News August 8, 2025
மீண்டும் வருகிறார் கேப்டன் பிரபாகரன்..!

1991-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. மாபெரும் ஹிட் அடித்த இப்படம் மூலம் தான் கேப்டன் என விஜயகாந்த் அழைக்கப்பட்டார். அவரது பிறந்தநாளையொட்டி ஆக.22-ல் இப்படம் ரி-ரிலீஸ் செய்யப்படுகிறது. தற்போதைய காலத்துக்கேற்ப 4K தொழில்நுட்பத்தில் ரிலீஸாகும் படத்தின் புதிய டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. யாரெல்லாம் படத்தை தியேட்டரில் பார்க்க வெயிட்டிங்?