News February 10, 2025
TVKவின் சிறப்பு ஆலோசகராகும் பிரசாந்த் கிஷோர்

தவெக தலைவர் விஜய்யுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று மதியம் சுமார் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில், 2026 தேர்தலில் தவெகவுக்கு சிறப்பு ஆலோசகராக செயல்பட பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் அல்லாமல் நட்பு அடிப்படையில் பணியாற்றுவதாக அவர் கூறியதாகவும் அதனை விஜய் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது.
Similar News
News March 5, 2026
கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

கூட்டுறவு & நகைக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனிடையே, 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில், திமுக, அதிமுக தரப்பில் கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த முறை 5 சவரன் நகைக்கடனை திமுக தள்ளுபடி செய்தது.
News March 5, 2026
தவெகவுடன் கூட்டணி.. ராகுலை தடுத்தாரா கார்கே?

தவெகவுடன் கூட்டணி அமைத்தால் இளைஞர்களின் ஆதரவை பெறுவதோடு, TN-ல் காங்கிரஸை வலுப்படுத்தலாம் என ராகுல் காந்தி கணக்கிட்டாராம். ஆனால், தேர்தல் நேரத்தில் கூட்டணியை முறிக்க கூடாது; மத்தியில் பாஜக அரசை எதிர்கொள்ள திமுக MP-க்களின் பலமும் தேவை என ராகுலிடம் கார்கே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தவெக தனது வாக்குவங்கியை நிரூபித்தால், அடுத்த தேர்தலில் கூட்டணி குறித்து பார்க்கலாம் என கார்கே கூறினாராம்.
News March 5, 2026
பாஜக புகுந்த மாநிலம் உருப்படாது: ப.சிதம்பரம்

ஆமை புகுந்த வீடும், அமித்ஷா புகுந்த வீடும் உருப்படாது; அதுபோல பாஜக புகுந்த மாநிலமும் உருப்படாது என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக அடுத்த 5 ஆண்டுகளில் இருக்குமா என்றே தெரியவில்லை என சாடினார். தமிழ்நாட்டில், பாஜக நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம் எனக்கூறிய அவர், இதுதான் திமுகவுடன் கூட்டணி அமைக்க முக்கிய காரணம் என்றார்.


