News November 25, 2024
பீகாரை மலத்துடன் ஒப்பிட்ட பிரசாத் கிஷோர்!

அமெரிக்காவில் உள்ள பீகார் மக்களிடம் காணொலி வாயிலாக பேசிய பிரசாந்த் கிஷோர், பீகார் தோல்வி மாநிலம் என்றும் Deep Shit என்றும் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தனி நாடாக இருந்திருந்தால் உலகின் 11வது பெரிய நாடாக இருந்திருக்கும் என்றும் அவர் பேசியுள்ளார். பீகாரில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
Similar News
News January 11, 2026
இனி வாட்ஸ்அப்பில் அரசு சேவைகளை பெறலாம்!

அரசு துறைகளின் சேவைகளை வாட்ஸ்அப் வாயிலாக பெற ‘நம்ம அரசு’ என்ற பெயரில் சாட்பாட் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவைகளை 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பெற முடியும். தற்போது 16 அரசு துறைகளை சேர்ந்த 51 சேவைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மின்சார கட்டணம் செலுத்தும் வசதி, மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இதில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 11, 2026
IND vs NZ: பட்டாசாய் வெடிக்க காத்திருக்கும் களம்!

IND vs NZ இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ODI தொடர் இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. SA-க்கு எதிரான தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய RO-KO ஜோடி இன்றைய போட்டியில் விளையாட உள்ளதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேபோல், மண்ணீரல் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஸ்ரேயஸ் ஐயர், நீண்ட நாள்களுக்கு பிறகு அணியில் இடம்பெற உள்ளார். மேலும், காயம் காரணமாக பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News January 11, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 11, மார்கழி 27 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அஷ்டமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


