News March 15, 2025
பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

மும்மொழிக் கொள்கை குறித்த ஆந்திர துணை முதல்வர் <<15763979>>பவன் கல்யாணின்<<>> கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்” என்று கூறுவது மற்றொரு மொழியை வெறுப்பதாகாது என்று பதிலடி கொடுத்துள்ளார். இது நமது தாய்மொழியையும், தாயையும் சுயமரியாதையுடன் பாதுகாக்கும் முயற்சி என்பதை யாராவது பவன் கல்யாணிடம், எடுத்துச் சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டார்.
Similar News
News March 10, 2026
ஈரான் போர்.. ₹70,000 கோடியை இழந்த LIC

ஈரான் போர் காரணமாக LIC பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. பிப்ரவரி 27-ல் ₹14.88 லட்சம் கோடியாக இருந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, மார்ச் 9 அன்று ₹14.17 லட்சம் கோடியாக சரிந்தது. மொத்தம் ₹70,105 கோடியை இழந்தது. SBI, HDFC, ICICI வங்கிகளின் பங்குகளில் ஏற்பட்ட சரிவால் LIC ₹15,293 கோடியையும், L&T பங்குகள் சரிவால் ₹7,609 கோடியையும் இழந்தது. இதனால் LIC முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
News March 10, 2026
IJK-வுக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு

TN தேர்தலையொட்டி தனி சின்னம் ஒதுக்க கோரி IJK மனு அளித்த நிலையில், அக்கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கி ECI உத்தரவிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் IJK-க்கு 2 சீட்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அக்கட்சி மைக் சின்னத்திலேயே போட்டியிடுமா, இரட்டை இலை (அ) தாமரை சின்னத்தில் களமிறங்குமா என்ற கேள்வி நிலவுகிறது. 2024 MP தேர்தலில், NTK ‘மைக்’ சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
News March 10, 2026
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… தடுமாறும் அண்டை நாடுகள்

மேற்காசிய போர் சூழலால் பல நாடுகளும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வங்கதேசத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை, பெட்ரோல்- டீசல் விற்பனைக்கு வரம்பு என நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை, 4 நாள் அலுவலக வேலை, 50% அரசு ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வரவேண்டும், கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


