News August 8, 2024
இந்திய ஹாக்கி அணிக்கு குவியும் பாராட்டு

இந்திய ஹாக்கி அணியின் திறமை, ஒற்றுமை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பாராட்டியுள்ளார். இந்திய அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஸ்ரீஜேஷின் அர்ப்பணிப்பு அனைவரையும் ஊக்கப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 14, 2025
காலையில் எழுந்ததும் 10 நிமிடம் இதை செய்யுங்கள்

காலையில் எழுந்ததும் சிறிது நேரம் ஒர்க்-அவுட் செய்வது அன்றைய நாளை சிறப்பானதாக தொடங்க உதவும். அதுமட்டுமில்லாமல், காலையில் எழுந்ததும் இவ்வாறு செய்வது, அந்த நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஒரு 10 நிமிடம் மாத்திரம் செலவிட்டு, மேல் உள்ள புகைப்படங்களில் உள்ளதை செய்யுங்கள். இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்.
News October 14, 2025
41 குடும்பத்திற்கும் மாதம் ₹5,000.. தவெக சார்பில் அறிவிப்பு

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பத்தினருக்கும் தவெக சார்பில் மாதந்தோறும் ₹5,000 வழங்கப்படும் என ஜேப்பியார் கல்வி நிறுவன தலைவர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும், பலியானோரின் வாரிசுகளின் படிப்புகளுக்கு ஆகும் செலவுகளையும் ஜேப்பியார் கல்வி நிறுவனம் ஏற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தவெக சார்பில் தலா ₹20 லட்சம் வழங்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார்.
News October 14, 2025
மத்திய அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

கல்லூரி விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்ல லேட் ஆனதால், ஹெலிகாப்டரில் அமைச்சர் விமான நிலையம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் பாதுகாப்பு அமைச்சக ஹெலிகாப்டர்கள் தவிர்த்த பிற ஹெலிகாப்டர்கள் பறக்க அனுமதி இல்லாததால், சாலைமார்க்கமாக விமான நிலையம் சென்று, தனி விமானத்தில் அமைச்சர் நாக்பூர் புறப்பட்டார்.