News April 10, 2024
பிரக்ஞானந்தா, விதித் போட்டிகள் டிரா

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 5ஆவது சுற்றுப் போட்டியில், தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா டிரா செய்துள்ளார். ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சிக்கு எதிரான இப்போட்டியில், அவர் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி டிராவில் முடிந்ததால், இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. மேலும், ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான மற்றொரு போட்டியில், விதித் குஜராத்தி டிரா செய்தார்.
Similar News
News March 17, 2026
யாருக்கும் பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை: தமிழிசை

CBI மூலம் NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு, தாங்கள் கூட்டணிக்காக யாருக்கும் அழுத்தமோ நெருக்கடியோ கொடுக்கவில்லை என தமிழிசை கூறியுள்ளார். தற்போதுள்ள தங்களின் கூட்டணி பலமாக உள்ளது என்ற அவர், வேறு யாரும் கூட்டணிக்கு வருவார்களா என்று தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
News March 17, 2026
கூட்டணியில் இருந்து NR காங்., விலகல்? அரசியல் பரபரப்பு

புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சியால்(LJK) புதுச்சேரி NDA கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆளும் NR காங்கிரஸுக்கு 16, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 14 சீட்டுகள் என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது LJK-வுக்கும் சீட்டுகள் வேண்டும் என பாஜக, NR காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுப்பதால், கூட்டணியில் வெளியேறுவோம் என ரங்கசாமி திட்டவட்டமாக கூறியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
News March 17, 2026
₹19,000 சம்பளம்.. ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்!

11,127 துணை லோகோ பைலட்டுகளை நிரப்புவதற்கான மெகா வேலைவாய்ப்பை RRB அறிவித்துள்ளது. பதவிகளுக்கேற்ப 10th – டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். ₹19,900 – ₹63,200 சம்பளம் வழங்கப்படும். 18 – 30 வயதுடைய விருப்பமுள்ளவர்கள் இங்கே <


