News April 1, 2025
பயிற்சியாளருக்காக புதிய அவதாரம் எடுத்த பிரக்…!

ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்கள் செய்யும் சிறுசிறு விஷயங்கள் கூட சோஷியல் மீடியாவில் கவனம் பெறும். அப்படித் தான், தமிழ்நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான பிரக்ஞானந்தா தனது பயிற்சியாளர் ராமச்சந்திரன் ரமேஷுக்கு தோசை சுட்டுக் கொடுத்ததும் வைரலாகியுள்ளது. சோஷியல் மீடியாவில் இதனைப் பகிர்ந்த பயிற்சியாளர், ஒவ்வொரு முயற்சியிலும் பிரக் நன்றாக தோசை சுடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 21, 2025
விஜய்யிடம் இதை LIKE பண்ணேன்: நாஞ்சில் சம்பத்

விஜய்யிடம் உள்ள துணிச்சலை பார்த்து ஆச்சர்யப்பட்டேன் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அரசியலில் 4 சீட்டுகளுக்காக தங்களை குறுக்கிக்கொள்ள உயர்ந்த தலைவர்களே தயாராகிவிட்டார்கள் எனவும், ஆனால் இப்போது அரசியலுக்கு வந்த விஜய், பாஜகவையும் திமுகவையும் தைரியமாக எதிர்கிறார் என்று பாராட்டினார். மேலும், விஜய்யின் இந்த துணிச்சலுக்கு முன்னால் மலைகூட தனக்கு ஒரு குன்றாக தெரிவதாகவும் பேசியுள்ளார்.
News December 21, 2025
10 வருஷம் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியலையா?

வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பலர் அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டவர்கள் என்று செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். கள்ள ஓட்டு தொடர்பான <<18619007>>நயினார் நாகேந்திரனின்<<>> கருத்துக்கு பதிலளித்த அவர், 10 வருடமாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது, இந்த கள்ள ஓட்டுகள் கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அப்போது நல்ல ஓட்டாக இருந்தது இப்போது கள்ள ஓட்டாகிவிட்டதா எனவும் கேட்டுள்ளார்.
News December 21, 2025
சாதி, மத உணர்வுகளை தூண்டுவது ஆபத்தானது: திருமா

மதுரையை சனாதன மையமாக மாற்ற பார்ப்பதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், சனாதன எதிர்ப்பே உண்மையான தமிழ் தேசியம் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனநாயக உணர்வை சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக சாதி, மத உணர்வுகளை தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல் எனவும் எச்சரித்துள்ளார்.


