News August 21, 2025
தீபாவளிக்கு பிரதீப்பின் LIK ரிலீஸ்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் LIK ரிலீஸ் செப்.18ல் இருந்து அக்.17க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் டீஸர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. மேலும் LIK ரிலீசால் ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாகவிருந்த பிரதீப்பின் ‘டூட்’ படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
Similar News
News January 15, 2026
கள்ளக்குறிச்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News January 15, 2026
பொங்கல் நாள்: தங்கம், வெள்ளி.. விலை ₹3,000 மாற்றம்

பொங்கல் நாளான இன்றும் கூட <<18862348>>தங்கத்தை போலவே<<>> வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹3 உயர்ந்து ₹310-க்கு விற்பனையாகிறது. மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோவுக்கு ₹3,000 உயர்ந்து ₹3,10,000-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் கடந்த 15 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹54,000 அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News January 15, 2026
‘தனுஷ்54’ படத்தின் பெயர் இதுதான்!

’போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடித்து முடித்துள்ள படத்திற்கு ‘கர’ என பெயரிடப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். பிரமாண்ட பொருள் செலவில் எமோஷனல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.


