News August 7, 2024
வயநாட்டிற்கு ₹2 கோடி நிதி அளித்த பிரபாஸ்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் ₹2 கோடி நிதி வழங்கியுள்ளார். முன்னதாக தென்னிந்திய நடிகர், நடிகைகள் பலரும் நிதியுதவி அளித்திருந்தனர். அங்கு கடந்த 30ஆம் தேதி நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 9ஆவது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News December 14, 2025
இளம் பெரியார் உதயநிதி: அமைச்சர் எ.வ.வேலு

தனது பிறந்தநாளில் கருப்பு உடை அணிந்த மற்றொரு இளம் பெரியார் உதயநிதி என அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டியுள்ளார். திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய அவர், திராவிட இயக்கத்தை இன்னும் 50 ஆண்டுகளுக்கு உதயநிதி எடுத்துச் செல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். திமுகவின் 5-வது தலைமுறையாக உதயநிதி உருவெடுத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
News December 14, 2025
வங்கி கணக்கில் ₹4,000.. அரசு புதிய அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹4,000 வழங்கும் PM யாசஸ்வி உதவித் தொகை திட்டத்திற்கான புதுப்பித்தல், புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை(டிச.15) வரை <
News December 14, 2025
தென்னாப்பிரிக்காவை மிரள விட்ட இந்திய பவுலர்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய பவுலர்கள் மாஸ் காட்டி வருகின்றனர். 7 ரன்களிலேயே தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்தது. ஹர்சித் ராணா 2 விக்கெட்களும், அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினர். தற்போது, 5 ஓவர்கள் முடிவில் அந்த அணி வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. மார்க்ரம், ஸ்டப்ஸ் களத்தில் உள்ளனர். இந்திய பவுலர்களின் ஆதிக்கம் தொடருமா?


