News May 24, 2024

பிரபாகரன் சர்ச்சை: அண்ணன் குடும்பம் முற்றுப்புள்ளி

image

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், குடும்பத்தினர் 2009ம் ஆண்டு போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறி வருகிறது. இதை பிரபாகரன் ஆதரவாளர்கள் நம்ப மறுக்கும் நிலையில், டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் உள்ளிட்டோர் பிரபாகரன், குடும்பத்தினர் ஏற்கெனவே வீரச்சாவு அடைந்து விட்டதாகக் கூறி, கடந்த 18ஆம் தேதி வீரவணக்க நாள் நடத்தி, மரண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

Similar News

News March 16, 2026

மீண்டும் சீண்டுகிறாரா மாணிக்கம் தாகூர்?

image

ஆணவ கொலைகளுக்கு எதிராக ’இவா நம்மவா’ மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆணவ கொலை போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு எதிராக இது ஒரு வலுவான பதில் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுவே உண்மையான சமூக நீதி என்றும், குறைவான பேச்சு, அதிகமான செயல் எனவும் கர்நாடக அரசை பாராட்டியுள்ளார். அதேவேளையில் TN-ல் ஆணவ கொலைகளைத் தடுக்க இப்படி ஒரு சட்டம் எப்போது வரும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 16, 2026

BREAKING: தேர்தல் பணம்.. CEO புதிய அறிவிப்பு

image

தேர்தலில் வாக்குக்காக பணம் கொடுப்பதை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருவதாக CEO அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். மேலும், சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்தால், பொதுமக்களை தொந்தரவு செய்யாமல் உடனடியாக திருப்பி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். குறிப்பாக ஆன்லைனில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News March 16, 2026

அதிமுகவை பாஜக விழுங்கி துப்பிவிடும்: உதயநிதி

image

நம்மிடம் கார் இல்லையென்றால், காரை புக் செய்து செல்வோம்; அதேபோன்று அதிமுகவை புக் செய்து பாஜக பயன்படுத்துகிறது என உதயநிதி விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், தேர்தலுக்குப் பிறகு நிதிஷ்குமாரை CM பதவியிலிருந்து பாஜக ஓரம்கட்டிவிட்டது; அவருக்கே இந்த நிலை என்றால், ஊர்ந்து சென்ற EPS-யும் ஊதித்தள்ளிவிடும் என்றார். தேர்தலுக்கு பிறகு அதிமுகவை பாஜக விழுங்கி துப்பிவிடும் எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!