News June 27, 2024
ராகுல் காந்திக்கு உள்ள அதிகாரங்கள்

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, மக்களவை எதிர்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் பல முக்கிய துறைகளின் அதிகாரிகள் நியமனத்தில், அவருடைய பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும். பல கூட்டு நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராக இருப்பதற்கான உரிமை அவருக்கு உள்ளது. CBI, மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களை நியமிக்கும் தேர்வு குழுக்களிலும் அவர் இடம்பெறுவார்.
Similar News
News December 15, 2025
பணத்திற்காக தெலுங்கில் இசையமைக்கின்றனர்: தமன்

தெலுங்கு சினிமாவில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைப்பதாக கூறியுள்ள தமன், ஆனால் தமிழில் தனக்கு பட வாய்ப்பு கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவில் இருக்கும் ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை என்று அவர் கூறியுள்ளார். பிறமொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு படங்களில் வேலை செய்வது விருப்பத்தால் அல்ல, பணத்திற்காக தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 15, 2025
கூட்டணி முடிவு.. அழைப்பு விடுத்தார் பிரேமலதா

கடலூரில் தேமுதிக சார்பில் ஜன.9-ல் ‘மக்கள் உரிமை மீட்பு’ மாநாட்டில் தேமுதிகவினர், பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டில் 2026 தேர்தலுக்கான கூட்டணி உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியிட இருப்பதாக தெரிகிறது. மேலும், ஜனவரிக்குள் கூட்டணியை இறுதி செய்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மாநாட்டில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளார்.
News December 15, 2025
சற்றுமுன்: மழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் டிச.17, 18 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35-45 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 °C இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.


