News August 16, 2024
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு நகரமான ஹுவாலினில் இருந்து 34 கிமீ தொலைவில், 9.7 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இதனால் அந்நாட்டின் தலைநகர் தைபேவில் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
Similar News
News August 15, 2025
ஆகஸ்ட் 15: வரலாற்றில் இன்று

* 1947 – இந்தியா சுதந்திரமடைந்த நாள். இன்று 78-வது சுதந்திர தினம்.
* 1872 – இந்தியத் தேசியவாதியும், ஆன்மிகத் தலைவருமான அரவிந்தர் பிறந்த தினம்.
* 1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
* 1948 – கொரியக் குடியரசு உருவானது.
* 1964 – நடிகர் அர்ஜுன் பிறந்தநாள்.
News August 15, 2025
CM ஸ்டாலின் அறிவிப்புகளுக்கு வரவேற்பு: திருமாவளவன்

தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளை வரவேற்பதாகவும், அதே சமயம் தூய்மைப் பணிகளை தனியார் மையம் ஆக்கப்படுவதை அரசு கைவிட வேண்டுமென திருமாவளவன் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கையின் போது தூய்மை பணியாளர்கள் தாக்கப்பட்டதாக வரும் தகவல் கவலைப்பளிப்பதாக தெரிவித்தார். மேலும், போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராக பதிவான வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
News August 15, 2025
சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்

*வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்.
* கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்.
* உண்மையான நண்பனாக இரு, அல்லது உண்மையான பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே.
* வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது.