News April 2, 2025
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சற்றுமுன் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. க்யூஷு தீவில் 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. நான்கு தினங்களுக்கு முன் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3000 பேர் உயிரிழந்தனர். அந்த சோகத்தில் இருந்து உலகம் இன்னும் மீள்வதற்கு முன் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (16.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News January 16, 2026
டாஸ்மாக் அசுர வசூல்.. வரலாற்று சாதனை

பொங்கல் பண்டிகையை ஒட்டி TN-ல் கடந்த 2 நாள்களில் ₹517.85 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. 14-ம் தேதி ₹217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான நேற்று ₹301 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் மட்டும் ₹98.75 கோடிக்கு விற்றுள்ளது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது 4 நாள்களில் ₹725 கோடிக்கு மது விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 2 நாள்களில் ₹518 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
News January 16, 2026
முதல்முறையாக Sunday-ல் பங்குச்சந்தை

பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக நேரத்தில் (காலை 9:15 முதல் மாலை 3:30 வரை) எந்த மாற்றமும் இருக்காது என்றும், பங்குச் சந்தை ஞாயிற்றுக்கிழமையில் இயங்குவது நாட்டின் வரலாற்றில் முதல்முறை என்றும் நிதி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


