News April 6, 2025
காலையில் கூடுதல் நன்மை கொடுக்கும் பவர் வாக்கிங்

இனி வெறுமனே நடைபயிற்சி செய்யாமல், பவர் வாக்கிங் செய்யுங்க. அது உடலுக்கு சவாலை அதிகரிக்கும். சிறிய அளவிலான எடையை (Dumbbells) கையில் சுமந்து, சாதாரண நடை வேகத்தை அவ்வப்போது கூட்டியும், குறைத்தப்படியும் நடைப்போடுங்கள். இதனால், உடல் எடை அதிகரித்து, கூடுதல் கலோரிகள் எரியும். பவர் வாக்கிங்கால், நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதால், இதனை காலையில் செய்ய அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News October 21, 2025
வாழ்வில் ஒருமுறையாவது இதை செய்து விடுங்கள் PHOTOS

வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் உலகில் ஏராளம். எழுந்திருப்பது, ஆபீஸுக்கு போவது, வீடு திரும்புவது, தூங்குவது… இப்படி போரடிக்கும் தினசரி வாழ்க்கையில் இருந்து சற்றே விலகி, கொஞ்சம் திரில்லிங்கான சாகசங்களை செய்து பாருங்கள். இது உங்களுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் ஒரு முறையாவது செய்ய வேண்டிய சில சாகசங்களை, மேல் உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள்.
News October 21, 2025
இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?

Women’s CWC-ல், இந்தியா ஹாட்ரிக் தோல்வியை தழுவியதால் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. அடுத்ததாக நியூசிலாந்து, வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா, அவற்றில் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். நியூசிலாந்திடம் தோற்றாலும் ரன் ரேட்டை பாஸிட்டிவாக தக்க வைத்தால் வங்கதேசத்துடன் வெற்றி பெறுவது போதுமானது. 2 போட்டிகளிலும் தோற்றால், நியூசிலாந்து 4-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும்.
News October 20, 2025
சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர இதை பண்ணுங்க

சர்க்கரை நோயை மருந்து மாத்திரைகள் மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. அதற்கு சரியான உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். குறைவான கிளைசெமிக் எண் கொண்ட உணவுகளை சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், நீண்ட கால ஆரோக்கியத்தையும் பெறலாம். அந்த வகையில், நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை மேலே போட்டோக்களை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.


