News April 10, 2025
திமுக அரசால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு: EPS

திமுக அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கடும் விலைவாசி உயர்வால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Similar News
News December 24, 2025
திருவள்ளூர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27660120 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)
News December 24, 2025
கணவரை கிரைண்டரில் அரைத்த மனைவி.. அதிர்ச்சி

உ.பி.,யில் கடந்த 15-ம் தேதி தலை, கை, கால் இல்லாத <<18646428>>உடல் <<>>கிடைக்கிறது. அதில், ‘ராகுல்’ என்ற டாட்டூ இருக்க, காணாமல் போனவர்களின் லிஸ்ட்டில் போலீசார் தேடினர். கணவரை காணவில்லை என ரூபி என்பவர் புகார் அளித்திருப்பதும், ராகுலின் போன் நவ.18-ம் முதல் Switch off ஆகியிருப்பதும் தெரியவந்தது. விசாரணை நடத்தியதில், காதலருடன் சேர்ந்து கணவனை கொன்று, கிரைண்டரில் துண்டு துண்டாக நறுக்கியதை ரூபி ஒப்புக் கொண்டுள்ளார்.
News December 24, 2025
இந்தியர்களின் ‘On site’ கனவுக்கு சிக்கல்

H1B விசா நடைமுறையில் பல தசாப்தங்களாக பின்பற்றி வந்த குலுக்கல் முறையை USA ரத்து செய்துள்ளது. அதிக சம்பளம் வாங்குவோர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் H1B விசா பெறுபவர்களில் 70% இந்தியர்களே; பிப்.27, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், குலுக்கல் முறையை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான நடுத்தர ஊழியர்களின் கனவை சிதைத்துள்ளது.


