News January 1, 2025
புயலால் ஒத்திவைப்பு: நாளை முதல் அரையாண்டு தேர்வுகள்

பெஞ்சல் புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன. அத்தேர்வுகள் நாளை முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி, தேர்வுகளுக்கு தேவையான ஏற்பாட்டை செய்யும்படி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News September 11, 2025
காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டிய பானங்கள்

தினமும் காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிக்கும் பழக்கம் தான் பலரிடமும் இருக்கிறது. உங்களுக்கு 35 வயதாகும் வரை இந்த பழக்கத்தை உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளும். அதற்கு மேல் பல உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக எந்த பானத்தை குடிப்பது நல்லது என்பதை தெரிந்துக்கொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. SHARE IT.
News September 11, 2025
OTT-ல் வெளியானது ‘கூலி’

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான கூலி அமேசான் பிரைம் OTT-யில் வெளியாகியுள்ளது. நாகர்ஜூனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகும் இப்படத்தை, தியேட்டரில் தவறவிட்ட ரசிகர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 11, 2025
BREAKING: செங்கோட்டையனை தொடர்ந்து அடுத்த தலைவர்

செங்கோட்டையன் நேற்று முன்தினம் டெல்லி சென்று திரும்பிய நிலையில், இன்று நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல உள்ளார். அங்கு அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. NDA கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து தலைவர்கள் விலகல், அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம், பாஜக உள்கட்சி பிரச்னைகள் குறித்து பேச உள்ளாராம். மீண்டும் TN அரசியல் பஞ்சாயத்து டெல்லியில் கூட உள்ளது.