News June 17, 2024
தேர்தலால் தள்ளிப்போன துணை முதல்வர் பதவி?

மக்களவைத் தேர்தல் முடிவு வெளியானதும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம். அப்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளிவந்தபடி இருந்தது. ஆனால், அதற்குள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதில் திமுக தலைமை கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. இதனால், உதயநிதிக்கு இப்போதைக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படாது எனப் பேசப்படுகிறது.
Similar News
News March 19, 2026
தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள்.. நாதக தேர்தல் வாக்குறுதி!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை சீமான் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதில், *சென்னை, திருச்சி, கோவை, மதுரை, குமரி என 5 தலைநகரங்கள். *வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை. *ஜனாதிபதியை மக்களே தேர்ந்தெடுக்க வலியுறுத்துவோம். *3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு லோக்சபா தொகுதி. *சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைப்பு உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
News March 19, 2026
தவெகவுக்கு எவ்வளவு வாக்கு உள்ளது? கேட்டார் ஸ்டாலின்

விருப்பமனு அளித்தவர்களிடம் மாவட்ட வாரியாக ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். அப்போது, பெரும்பாலானோரிடம் உங்கள் தொகுதியில் தவெகவுக்கு எவ்வளவு வாக்கு வங்கி உள்ளது என்று ஸ்டாலின் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைப் பொறுத்து இளைஞர்கள், பெண்கள் வாக்குகளை கவரும் வகையில் திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என அவர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
News March 19, 2026
கூட்டணி முடிவை மீண்டும் மாற்றிய ரங்கசாமி!

NDA-வில் அதிருப்தியிலிருந்த NR காங்கிரஸ், தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் விஜய் உடன் கூட்டணி அமைப்போம் என நேற்று முன்தினம் கூறியிருந்தது. மேலும், 2 நாள்களாக NR காங்கிரஸ் – பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இருந்தனர். இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில், திடீரென தனது முடிவை மாற்றிய ரங்கசாமி, இன்று காலை முதல் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


