News December 29, 2024
அண்ணாமலையை விமர்சித்து போஸ்டர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அண்ணாமலையை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டார். இந்நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக எப்போது சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறீர்கள் என திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 13, 2026
கூட்டணிக்குள் செல்கிறாரா விஜய்?

வரும் தேர்தலில் தவெக தனித்து களம் காணும் என ஆதவ், CTR நிர்மல் குமார் உள்ளிட்டோா் கூறி வந்தனர். இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெகவின் மா.செ.,க்கள் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் தனித்து களம் காணலாமா, கூட்டணியில் சேரலாமா என ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில் தவெகவுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி சேர பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது.
News March 13, 2026
விந்தணு ரேஸ் உலகக் கோப்பை.. ₹92 லட்சம் பரிசு!

ஆண் கருத்தரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், US நிறுவனம் ‘ஸ்பெர்ம் ரேசிங் வேர்ல்ட் கப்’ போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. உடல்நலம் & Sperm Sample தரத்தின் அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 3,800 மைக்ரோமீட்டர் நீளமுள்ள ஒரு நுண்ணிய பாதையில் இந்த போட்டி நடைபெறும். One on one, லீக் சுற்று என நடைபெறும் இத்தொடரில் வெற்றியாளருக்கு ₹92 லட்சம் பரிசாக வழங்கப்படவுள்ளது.
News March 13, 2026
போன் மிஸ்ஸானால்.. உடனே இத பண்ணுங்க!

திடீரென போன் தொலைந்து போனால், உங்களின் தரவுகள் தவறாக யூஸ் பண்ணப்படும் என பதற வேண்டாம். கயவர்கள் உங்கள் போனை துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க இதை பண்ணுங்க ➤முதலில் ஃபோனின் IMEI நம்பரை போலீசிடம் புகாரளிக்கவும், அது போன் பாக்ஸ் அல்லது Warranty கார்டிலேயே இருக்கும் ➤https://www.ceir.gov.in/ போர்ட்டலுக்குள் சென்று ஃபோன் குறித்த தகவல்களை கொடுக்கவும் ➤சிம்மை கார்டை பிளாக் செய்யவேண்டும். SHARE IT.


