News January 23, 2025
ஈரோடு தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்தவுள்ளனர். ஜனவரி 27ஆம் தேதி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டு பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
Similar News
News November 16, 2025
TVK போராட்டத்தை சீர்குலைக்க DMK முயற்சியா?

முறைப்படி அனுமதி வாங்கி நடத்தப்படும் போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை திமுக அரசும், காவல்துறையும் மேற்கொள்வதாக தவெக குற்றம் சாட்டியுள்ளது. SIR குளறுபடிகளுக்கு எதிராக யாரும் போராட கூடாது என திமுக நினைக்கிறதா என கேள்வியும் எழுப்பியுள்ளது. மேலும், மக்களுக்கு ஆதரவான தவெக போராட்டம் எழுச்சியாக தொடரும். அராஜக திமுக ஆட்சிக்கு மக்களே முற்றுப்புள்ளி வைக்கப்பார்கள் என்றும் சாடியுள்ளது.
News November 16, 2025
அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாற்றம்

124 ரன்கள் இலக்குடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, தெ.ஆப்பிரிக்காவின் பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. ஓபனிங் பேட்ஸ்மென் ஜெய்ஸ்வால், KL ராகுல் (1 ரன்) இருவரும் மார்கோ யான்சனின் பந்தில், வெரெய்னிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர். வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரெல் களத்தில் உள்ளனர். சுப்மன் கில், காயம் காரணமாக இந்த டெஸ்டில் இருந்து இன்று காலை விலகினார்.
News November 16, 2025
விஜய் வந்தால் சந்தோஷம்: ஆண்ட்ரியா

One last film, one last dance என ‘ஜனநாயகன்’ விஜய் ரசிகர்களுக்கு கடைசி திரை விருந்தாக அமையவுள்ளது. அரசியலில் இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் மீண்டும் சினிமாவிற்குள் வரலாமா என்று ஆண்ட்ரியாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, விஜய் வந்தால் சந்தோஷம், வரவில்லையென்றாலும், அவர் எப்போதும் தளபதி தான் என்று பதிலளித்தார்.


