News August 5, 2024
வள்ளியூரைச் சேர்ந்தவருக்கு தபால் தலை

இந்திய தபால் துறையானது வள்ளியூரைச் சேர்ந்த வனவிலங்கு புகைப்பட கலைஞரான சுப்பையா நல்லமுத்துவை சிறப்பிக்கும் விதமாக அவரது நினைவு தபால் தலையை இன்று வெளியிட்டது. வனவிலங்கு புகைப்பட கலைஞரை கவுரவிக்கும் இந்தியாவின் முதல் தபால் தலை இதுவாகும். மேலும் இவர் ஒளிப்பதிவாளராக திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் மங்கள்யான் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன் என்பவரின் உடன்பிறந்தவர் ஆவார்.
Similar News
News September 11, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.11] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News September 11, 2025
கூடங்குளம் அருகே கோவில் சிலை உடைப்பு: இருவர் கைது

கூடங்குளம் அருகே வைராவி கிணறு கிராமத்தில் பிரபல பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு மின்தடை ஏற்பட்ட போது, கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் செயலிழந்த நிலையில், கோவில் சிலை உடைக்கப்பட்டது. சிலையை உடைத்ததாக தவசிகுமார் மற்றும் சுயம்புலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்களிடம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நெஜில்சன் விசாரிக்கின்றனர்.
News September 11, 2025
நெல்லை: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.