News March 25, 2025
போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு: பெண்களுக்கு சூப்பர் சலுகை!

மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் 40% வரை பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை, தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பெண்கள் குறைந்தது ₹1,000ல் இருந்து ₹2 லட்சம் வரை FD ஆக முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.5% நிலையான வட்டி; அதுவும் காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு வழங்கப்படும். FDல் உள்ள பணத்தை 40% வரை எடுத்துக்கொள்ளலாம், மார்ச் 31க்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும்.
Similar News
News November 25, 2025
மருத்துவத்தில் இந்தியாதான் பெஸ்ட்.. ஏன் தெரியுமா?

மருத்துவ சேவையில் இந்தியா உலகளவில் சிறந்து விளங்குகிறது. அமெரிக்காவை ஒப்பிடுகையில் சிகிச்சைகள் விரைவாகவும், மலிவாகவும் கிடைக்கின்றன. இதில், வியப்பான தகவல் என்னெவென்றால், அமெரிக்காவை விட இந்தியாவில் குறைவான மருத்துவர்களே உள்ளனர். அமெரிக்காவை விட இந்தியாவில் குறைந்த செலவில் செய்ய முடியும் சில சிகிச்சைகளை மேலே, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 25, 2025
தலைமை சொன்னால் CM ஆக தொடர்வேன்: சித்தராமையா

கர்நாடகாவில் <<18373166>>உள்கட்சி பூசல்<<>> உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என சித்தராமையா தெரிவித்துள்ளார். டிகே சிவகுமாரும் தலைமையின் முடிவுக்கு கட்டாயம் கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், நான் முதல்வராக தொடர வேண்டும் என்று தலைமை முடிவெடுத்தால், தொடர்வேன் என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து ராகுல் வந்த பிறகு, இதுபற்றி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
News November 25, 2025
ராசி பலன்கள் (25.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


