News August 14, 2024

Post-Mortem report: பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பலாத்காரம்

image

மேற்குவங்க பெண் பயிற்சி மருத்துவர், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பணியாற்றிய அவர், கடந்த 9ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். விசாரணையில் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்த நிலையில், அவர் கூட்டு வன்முறைக்கு ஆளானது, தற்போது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஒருவர் கைதான சூழலில், சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 1, 2025

BREAKING: அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

image

கனமழை காரணமாக, நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது. இதேபோல், நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலை., தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2025

திமுகவின் குளறுபடியால் மாணவர்கள் அவதி: அன்புமணி

image

சென்னையில் இன்று கனமழை பெய்தும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் முந்தைய திமுக ஆட்சியில் கலெக்டர்களுக்கு மாற்றப்பட்டது தான் குழப்பங்களுக்கு காரணம் என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். பள்ளிகளுக்கு லீவ் கொடுக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியிறுத்தியுள்ளார்.

News December 1, 2025

எப்படி சுனாமி வருகிறது?

image

கடலுக்கு அடியில் உள்ள டெக்டானிக் பிளேட்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதனால், கடல் சீற்றமடைந்து சுனாமி உருவாகிறது. பொதுவாக ரிக்டர் அளவில் 8.0 மேல் பூகம்பம் பதிவானால் மட்டுமே பெரியளவில் சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சுனாமி வருவதற்கு முன் கடல் நீர் 100-200 அடிகள் வரை உள்நோக்கி இழுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE.

error: Content is protected !!