News October 9, 2025

இந்தியாவுடன் போர் ஏற்பட வாய்ப்பு: பாக். அமைச்சர்

image

இந்தியாவுடன் போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார். பதற்றங்களை அதிகரிக்க விரும்பவில்லை எனவும், ஆனால் போர் வந்தால், கடந்த காலங்களை விட பாகிஸ்தான் சிறப்பான பதிலடியை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது பாகிஸ்தானுக்கு அதிக நாடுகள் ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 9, 2025

ராணாவை தேர்வு செய்தது ஏன்? அஸ்வின்

image

ஆஸி.,க்கு எதிரான தொடரில் <<17930539>>ஹர்ஷித் ராணா<<>> தேர்வு செய்யப்பட்டதற்கு அஸ்வின் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். ராணா தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிய ஆவலாக இருக்கிறேன். ஆஸி., மண்ணில் ஒரு வேகப்பந்து வீச்சாளர், ஒரு பேட்ஸ்மேனாகவும் இருக்க வேண்டும் என்பதால், அவர் அணியில் இடம்பிடித்திருப்பார் என நினைக்கிறேன். ஆனால், அவரது பேட்டிங் திறனில் நம்பிக்கை இல்லை என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

News October 9, 2025

எந்த பாட்டில் முதலில் நிரம்பும்?

image

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்ணுறீங்களா..? வாங்க ஒரு சின்ன கேம் ஆடுவோம். மேலே உள்ள படத்தில், ஒரு குழாயில் இணைக்கப்பட்ட 7 பாட்டில்களை காணலாம். அதை கவனமாகப் பார்த்து, முதலில் எந்த பாட்டில் நிரம்பும் என சொல்லுங்கள். கொஞ்சம் லாஜிக்குடன் யோசித்தால், உங்களுக்கு பதில் கிடைக்கும். உங்க ஃப்ரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணி கேட்டுப்பாருங்க!

News October 9, 2025

கந்த சஷ்டி, விடுமுறை.. நாளை முதல் சிறப்பு அறிவிப்பு

image

கந்த சஷ்டி, வார விடுமுறையையொட்டி ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் அக்.12 வரை 3 நாள்களுக்கு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், அக்.27-ம் தேதி கந்தசஷ்டி விழாவையொட்டி பிற பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!