News August 28, 2025
பாசிட்டிவ் ரிப்போர்ட்.. மீண்டும் களத்தில் இறங்கிய கில்

விளையாடுவதற்கு தகுதியான உடல்நிலை இல்லை என்று மருத்துவ அறிக்கை வந்ததால், துலீப் டிராபியின் வடக்கு மண்டல கேப்டன் பொறுப்பில் இருந்து சுப்மன் கில் விலகியிருந்தார். இந்நிலையில், அவரது ரத்த பரிசோதனை பாசிட்டிவாக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மொஹாலியில் உள்ள அவர், ஆசிய கோப்பை தொடரை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Similar News
News March 15, 2026
BREAKING: கோர பஸ் விபத்து.. 7 தமிழர்கள் பலி

தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் பஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களில் 2 பெண்கள், 5 ஆண்கள் அடங்குவர். அங்குள்ள மங்கம்மா கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்புகையில், கோர்கா மாவட்டத்தில் இந்த எதிர்பாராத சோகச் சம்பவம் நடந்துள்ளது. மேலும் 7 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
News March 15, 2026
தமிழ்நாடு தேர்தல் தேதி.. BIG UPDATE

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டிற்கான 17-வது சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்னும் சற்றுநேரத்தில்(4 மணிக்கு) அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள விக்யான் பவனில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்தல் தேதி உள்ளிட்ட பட்டியலை உடனுக்குடன் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள். மேலும் <
News March 15, 2026
நெதன்யாகு உயிருடன் உள்ளார்: வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஈரானுடனான போருக்கிடையே இஸ்ரேல் PM நெதன்யாகு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. மார்ச் 13-ல் நெதன்யாகு பேசிய வீடியோவில் அவரது கையில் 6 விரல்கள் இருப்பதாகவும், இது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் SM-களில் தகவல் பரவியது. இந்நிலையில், நெதன்யாகு படுகொலை செய்யப்பட்டதாக வரும் தகவல் பொய்யானது என்றும், அவர் நலமுடன் உள்ளதாகவும் இஸ்ரேல் PM அலுவலகம் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


