News June 16, 2024
ஒடிஷா முதல்வரிடம் உள்ள இலாகாக்கள்

ஒடிஷா முதல்வராக கடந்த 12ஆம் தேதி மோகன் சரண் மஜி பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, முதல்வர் மஜி உள்துறை, நீர்வளம் உள்ளிட்ட 5 துறைகளை தன் வசம் வைத்துக் கொண்டார். துணை முதல்வர் பிரவதி பரீடாவுக்கு, மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை, மிஷன் சக்தி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
தமன்னா எதிர்பார்க்கும் அந்த அதிர்ஷ்டசாலி யாரோ?

விஜய் வர்மா உடனான பிரேக்கப்பிற்கு பிறகு, தமன்னா தனது எதிர்கால வாழ்க்கை துணை குறித்து பகிர்ந்துள்ளார். முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் தான், நான் அவர்களின் வாழ்க்கைக்கு வந்ததாக கருத வேண்டும், அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி எனக்கு வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும், அந்த அதிர்ஷ்டசாலியை பார்க்க ஆவலாக இருப்பதாகவும், அது விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
டாலர் சிட்டியில் தொழில் பாதிப்பு: EPS

டிரம்ப் வரி விதிப்பால் டாலர் சிட்டியான திருப்பூரில் 50% தொழில்கள் முடங்கிவிட்டதாக EPS தெரிவித்துள்ளார். தொழில் அதிபர்களை ஸ்டாலின் சந்திக்காதது தவறு என தெரிவித்த அவர், பாதிப்புகளை PM மோடியிடம் CM எடுத்து கூறி இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் முன் உள்ளூர் தொழிலை பாதுகாக்க வேண்டும் எனவும் திமுக அரசை EPS வலியுறுத்தியுள்ளார்.
News September 13, 2025
ராசி பலன்கள் (13.09.2025)

➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – சினம் ➤மிதுனம் – அன்பு ➤கடகம் – போட்டி ➤சிம்மம் – ஜெயம் ➤கன்னி – நன்மை ➤துலாம் – பகை ➤விருச்சிகம் – இன்பம் ➤தனுசு – திடம் ➤மகரம் – பெருமை ➤கும்பம் – மகிழ்ச்சி ➤மீனம் – விவேகம்.