News October 27, 2025
AI-ஆல் உருவாக்கப்பட்ட ஆபாச வீடியோ: சிரஞ்சீவி அதிர்ச்சி

தனது புகைப்படத்தை வைத்து AI-ஆல் உருவாக்கப்பட்ட, ஆபாச வீடியோ இணையதளத்தில் பரவி வருவதாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ஐதராபாத் போலீஸில் புகாரளித்துள்ளார். உடனே அந்த வீடியோக்களை நீக்குமாறும், இதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இது தன்னிச்சையாக நடக்கவில்லை எனவும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News October 27, 2025
BREAKING: காலில் விழுந்து விஜய் அழுதார்

கரூர் துயரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் காலில் விழுந்து விஜய் அழுததாக தகவல் வெளியாகியுள்ளது. தனது பரப்புரைக்கு குழந்தைகளுடன் வர வேண்டாம் என அறிவுறுத்தியும் ஏன் அழைத்து வந்தீர்கள் என்று விஜய் மனமுடைந்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், உங்களுடைய இழப்பை தன்னால் ஈடு செய்யவே முடியாது என்றும், சென்னைக்கு அழைத்து வந்ததற்கு மன்னித்து விடுங்கள் எனவும் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளாராம்.
News October 27, 2025
குறைந்த விலையில் அதிக புரோட்டீன்

நம் உடலின் வளர்ச்சிக்கும், தசைகளின் வலிமைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், முக்கிய ஊட்டச்சத்தாக புரோட்டீன் உள்ளது. தினசரி உணவில் புரோட்டீன் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்கும். அதிக செலவு இல்லாமல், குறைந்த விலையில் புரோட்டீனை எளிதாக பெறலாம். எந்த உணவில், எவ்வளவு புரோட்டீன் உள்ளது, என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News October 27, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டால் என்ன செய்வது?

2003 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், SIR மேற்கொள்ளப்படும் போது எந்த ஆவணமும் சமர்பிக்க வேண்டியது இல்லை என ECI விளக்கம் அளித்துள்ளது. இறுதி <<18120268>>வாக்காளர் பட்டியலில்<<>>, வாக்காளர் பெயர் விடுபடுவது உள்ளிட்ட ஏதேனும் பிரச்னை இருந்தால் மாவட்ட கலெக்டரிடம் முதல் முறையீட்டை செய்யலாம். கலெக்டர் அதை நிராகரித்தால், மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் 2-வது முறையீட்டை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.


