News March 17, 2024
பாஜகவில் இணைந்த பிரபல பாடகி

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, நட்சத்திர விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாடகி அனுராதா படுவால் பாஜகவில் இணைந்துள்ளார். பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அனுராதா, அவரது தலைமையின் கீழ் பணிபுரிவது மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
BCCI பொறுப்புக்கு காய் நகர்த்தும் பிரவீன் குமார்

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற, முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் விண்ணப்பித்துள்ளார். BCCI-ன் தேசிய அணிக்கான தேர்வுக்குழுவில், 2 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்பதால், பிரவீன் குமார் தற்போது விண்ணப்பித்துள்ளார். அதேபோல், மற்றொரு முன்னாள் வீரரான RP சிங்கும் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 5, 2025
செங்கோட்டையன் மனம் திறக்கவில்லை: திருமா

செங்கோட்டையன் சொன்னது போல் முழுமையாக, மனம் திறந்து பேசவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை, ஆனாலும் அவர் இன்னும் வெளிப்படையாகவே பேசியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். பெரியார் இயக்கம் என்ற முறையில் விசிக, அதிமுகவை பெரிதும் மதிக்கிறது என்றார்.
News September 5, 2025
ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த விஜய்

ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு அவர், தனது X தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் வாழ்வில் ஏற்றம் காண வழிவகை செய்யுமாறு அரசுக்கு விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.